/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழைக்காலங்களில் தென்னை மரங்களை பாதுகாக்கணுமா? விவசாய அதிகாரி சொல்வதை கேளுங்க

ADDED : அக் 22, 2025 07:38 AM
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்மணி பருவமழை காலங்களில் தென்னையை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது:
மழை, நீர் தேக்கம், தொடர்ச்சியான மண் ஈரப்பதம் பயிர் வளர்ச்சியை பாதிப்பதுடன் நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும். அதனால் வடிகால் வசதியை அமைத்து தென்னை மரத்தின் அடித்தண்டு பகுதியில் தண்ணீரைத் தேங்க விடக்கூடாது. நீர் தேங்கினால் வேர் சார்ந்த அழுகல் நோய் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும்.
பருவமழை காலங்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் உயிர் உரங்களை அதிகளவு பயன்படுத்தினால் மண்ணில் பல்கி பெருகும். ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மழை நீரில் வயல் பகுதியில் இருந்து அவை வெளியே அடித்துச் செல்லப்படும். மரத்திற்கு அருகில் உழவு செய்யவும் கூடாது. இது வேர்களை காயப்படுத்தி நோய் தாக்குதலை ஏற்படுத்தும்.
அடித்தண்டு பகுதியில் தொடர்ந்து ஈரப்பதம் இருப்பதால் உருவாகும் பூஞ்சை, பாசியை அப்புறப்படுத்தி விட்டு சுண்ணாம்பு அடிக்க வேண்டும். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மரத்தின் கொண்டை பகுதியில் காய்ந்த குறும்பை, மட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். மழை நேரங்களில் உதிர்ந்த மட்டைகளை அப்புறப்படுத்தாத நிலையில், மட்டைகள் அழுகினால் வண்டு தாக்குதல் பாதிப்பு ஏற்படும். மரங்களுக்கு காப்பீடு செய்வதன் மூலமும் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.