ADDED : அக் 21, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : மதுரை, மாத்துார், அப்பன் திருப்பதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 49; ராஜபாளையம் பட்டாலியன் போலீஸ் பிரிவில் எஸ்.ஐ., யாக பணியாற்றினார்.
இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, மதுரையில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக காரில் மதுரை- -- ராஜபாளையம் ரோட்டில் வந்தார்.
எம்.சுப்புலாபுரம் அருகே, எதிரே சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜெயகுமார் இறந்தார்.