ADDED : டிச 29, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் சித்த வைத்தியர்கள் சங்கக்கூட்டம் நடந்தது. தலைவர் அப்துல் ஜாபர் தலைமை வகித்தார்.
செயலாளர் குருநாதன், பொருளாளர் நம்மாழ்வார், ஓய்வு பெற்ற எஸ்.பி., மாணிக்கம், வழக்கறிஞர் மாதேஷ், ஓய்வுபெற்ற பேஜ் ட்ரக்ஸ் கட்டுப்பாட்டாளர் சாரங்கபாணி, தமிழ்நாடு சித்த வைத்தியர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் நடராஜன், மாநில சித்த வைத்திய சங்க செயலாளர் பாக்கம் தமிழன், ரமண பிரஸனாந்தகிரி சுவாமிகள், அகில இந்திய சித்த வைத்திய சங்க துணைச் செயலாளர் ரவி கலந்து கொண்டனர்.
செயல் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''புதியவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும். ஆய்வு பட்டங்கள், பி.எச்.டி., படிப்பு, நல வாரியம் உருவாக்குவது சங்கத்தின் முக்கிய நோக்கம்'' என்றார்.

