/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வணிக செயல்பாடுகளை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தளம் 'சிம்பிலி'
/
வணிக செயல்பாடுகளை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தளம் 'சிம்பிலி'
வணிக செயல்பாடுகளை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தளம் 'சிம்பிலி'
வணிக செயல்பாடுகளை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தளம் 'சிம்பிலி'
ADDED : நவ 03, 2025 04:33 AM
மதுரை: மதுரையில் டாட் காம் இன்போவே நிறுவனம் சார்பில், வணிகம் மற்றும் நிபுணர்களை அறிவுப்பூர்வமான ஆட்டோமேஷனுடன் மேம்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான 'சிம்பிலி'யின் அறிமுக விழா நடந்தது.
தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார். அன்றாட வணிக நடவடிக்கைகளை எளிதாக்க உருவாக்கப்பட்ட பல சிறப்பு 'ஏஐ' முகவர்களை பயன்படுத்த, நிர்வகிக்க ஒரு ஒருங்கிணைந்த தளமாக சிம்பிலி செயல்படும். இதன் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம், திட்டமிடல் முகவராக 'ஆல்பிரட்' அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தனிநபர் மற்றும் சந்தைப்படுத்துதல் குழுக்களுக்கு சமூக வலைதளங்களில் நிமிடங்களில் உள்ளடக்கத்தை உருவாக்க, திட்டமிட உதவுகிறது.தியாகராஜன் பேசுகையில், ''மதுரையில் இருந்து சிம்பிலி போன்ற புதுமையான தொழில்நுட்ப தயாரிப்புகள் வெளிவருவது மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. இது தமிழ்நாட்டின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ந்து வரும் வலிமையைப் பிரதிபலிக்கிறது'' என்றார். சிம்பிலி இணை நிறுவனர் வெங்கடேஷ் கூறுகையில், ''ஏஐ ஒத்துழைப்புக்கான அடித்தளமாக சிம்பிலி கருதப்படுகிறது. ஆல்பிரட் போன்ற ஒவ்வொரு முகவர்களும் வணிக சவால்களை ஆட்டோமேஷன், செயல்திறன் மற்றும் நுண்ணறிவு மூலம் தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன'' என்றார்.

