/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுமலை பல்லுயிர் பூங்கா உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சிறுமலை பல்லுயிர் பூங்கா உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 02, 2025 11:13 PM
மதுரை: மதுரை மணிபாரதி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக பல்லுயிர் பூங்காவை தமிழக அரசு ரூ.5 கோடியில் அமைத்தது. அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். குடிநீர், கழிப்பறை, அறிவிப்பு பலகை, பாதுகாப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய தமிழக வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு, 'பூங்கா பணியை 2 மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்,' என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள்: விரைவில் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு பைசல் செய்தனர்.