UPDATED : நவ 10, 2026 03:31 AM
ADDED : நவ 09, 2026 03:58 PM

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ் தவிர ஒன்பது தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சோழவந்தானில் இலந்தைக்குளம் பகுதியில் 6 ஏக்கர் நிலத்தில் ரூ.3 கோடி மதிப்பில் 200 மீட்டர் தடகள மண் டிராக், கபடி, வாலிபால் அரங்கு, மினி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கில் அச்சம்பத்து, மதுரை கிழக்கில் சக்கிமங்கலம், மேலுார் கருத்த புளியம்பட்டி, உசிலம்பட்டி சீமானுாத்து பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் 200 மீட்டர் தடகள மண் டிராக், பாக்ஸ் கிரிக்கெட், ஜிம், கபடி, வாலிபால் திறந்தவெளி அரங்குகள் அமைக்கும் பணி 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஒரு ஏக்கர் போதும்
மதுரை தெற்கு, மதுரை மத்தி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் 6 ஏக்கர் அளவில் ஒரே இடமாக கிடைக்காததால் இத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலம் கிடைத்தால் கூட அதே ரூ.3 கோடி மதிப்பில் கபடி, பென்சிங், டேபிள் டென்னிஸ், கேரம் விளையாட பல்நோக்கு உள்ளரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்து இடத்தேர்வு நடக்கிறது.
