/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுதானிய சாகுபடி விழிப்புணர்வு துவக்கவிழா
/
சிறுதானிய சாகுபடி விழிப்புணர்வு துவக்கவிழா
ADDED : டிச 17, 2024 04:06 AM
மதுரை: உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசார வாகன ஊர்தியை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து டி.ஆர்.ஓ. சக்திவேல் தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் வைஷ்ணவி பால், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர்கள் சாந்தி, ராணி, வேளாண் அலுவலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் மானாவாரியில் சிறுதானிய சாகுபடிக்கான இலக்கு 32 ஆயிரம் எக்டேர். தற்போது 34 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம், சோளம், குதிரைவாலி, வரகு, சாமை, கம்பு பயிரிடப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் மட்டும் 50 சதவீத பரப்பில் சாகுபடியாகி உள்ளது.
பரப்பளவை இன்னும் அதிகரிக்கும் நோக்கத்தில் விதை, இடுபொருள், உரம், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, வேப்பெண்ணெய் பூச்சி விரட்டி அனைத்தும் 50 சதவீத மானிய விலையில் தரப்படுகிறது. விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.

