ADDED : டிச 22, 2024 06:51 AM
மதுரை: மதுரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., இனிக்கோ திவ்யன், டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., சிவப்பிரகாசம் மேல அனுப்பானடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு லாரி மூலம் கேரளாவிற்கு கடத்தப்படயிருந்த 24 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேல அனுப்பானடி கதிர்வேல், பேச்சிகுளம் பாலசுப்பிரமணியன், கன்னியாகுமரி மாவட்டம் புல்லயான்விளை முருகதாஸ், பாறைசாலை சிஜி, ஜோஷ்வா, அஜின்ஷா, கேரளா காலடி டான்வர்கிஸ், லாரி டிரைவர் புதுச்சேரி மணிகண்டன், கிளீனர் குமார் மீது வழக்கு பதிந்தனர்.
இதில் முருகதாஸ், பாலசுப்பிரமணியன், மணிகண்டன், குமாரை கைது செய்தனர்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கடத்தல், பதுக்கல் தொடர்பாக 1800-599-5950 என்ற கட்டணமில்லா டெலிபோன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு டி.ஜி.பி., சீமா அகர்வால், ஐ.ஜி., ஜோக்ஷி நிர்மல் குமார் தெரிவித்தனர்.