ADDED : ஜன 04, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் - - திருப்பத்துார் மெயின் ரோட்டில் கீழவளவில் ரோட்டோரத்தில் மேல்நிலைத் தொட்டி கட்ட பெரிய பள்ளம் தோண்டப்பட்டு மாத கணக்கில் மூடப்படாமல் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டனர்.
மெயின் ரோட்டில் செல்லும் பஸ், பள்ளத்திற்குள் கவிழும் அபாயம் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பள்ளம் சரி செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

