ADDED : செப் 13, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: புதுசுக்காம்பட்டி சிறுமேளம் கண்மாயில் 22 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை உறிஞ்சுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இம்மரத்திலிருந்து இலை, கிளைகள் விழுந்து கருப்பு நிறமாக மாறும் தண்ணீரை பயன்படுத்துவதால் நெற்பயிரில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத் துறையினர் ஏலம் நடத்தி சீமை கருவேல மரங்களை அகற்றியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.