ADDED : அக் 26, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: - சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தென்கரை-- பள்ளப்பட்டி ரோடு சந்திப்பில், மதுரை மெயின் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைந்தனர். பள்ளத்தால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடினர்.

