ADDED : ஜன 16, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் -- பள்ளபட்டி ரோட்டில் பல கி.மீ., துாரத்திற்கு ராட்சத குடிநீர் குழாய் பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது. அதை சரி செய்து முறையாக திட்டமிடாமல் ரோடு அமைத்ததால் 1 அடி ஆழம் வரை பள்ளமாகியும், அலை அலையாகவும் மாறியது. இதனால் வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைந்தனர். உயிர் பலியும் ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைத்தனர்.

