/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா கலை நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க 'சம்திங்?'
/
மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா கலை நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க 'சம்திங்?'
மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா கலை நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க 'சம்திங்?'
மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா கலை நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க 'சம்திங்?'
ADDED : செப் 22, 2024 07:21 AM
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தினமும் மாலை 6:00 மணி முதல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். பரதநாட்டியம், தனி இசை, பாட்டு என இசை நிகழ்ச்சிகள் நடத்த தனியாகவோ, அமைப்பின் சார்பிலோ அல்லது பயிற்சி பள்ளிகள் சார்பிலோ கோவில் நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்கின்றனர்.
இந்தாண்டு, 250 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அதில் செல்வாக்கு உள்ள நபர்களின் சிபாரிசு, நிகழ்ச்சியின் முக்கியத்துவம் பொறுத்து நிர்வாகம் நேரம் ஒதுக்கி வருகிறது. ஆனால் 'சம்திங்' கொடுத்தால் தான் நேரம் ஒதுக்குகின்றனர். இல்லையெனில் அனுமதி தரமறுக்கின்றனர்' என விண்ணப்பித்தவர்களில் சிலர் புகார் தெரிவிக்கின்றனர்
இதை கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:
நவராத்திரி விழாவில் பரதநாட்டியம் அரங்கேற்றம், இசை அரங்கேற்ற நிகழ்ச்சி நடத்துவதை பெருமையாக கருதுவர். இந்நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கி தர கோவில் நிர்வாகம் தரப்பில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
எங்களிடம் நேரம் கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே சில விண்ணப்பத்தாரர்கள் தங்களது பயிற்சி பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர்.
அவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழலில், கட்டணம் வசூலித்த காரணத்தால் எப்படியாவது கோவிலுக்குள் நிகழ்ச்சி நடத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
இதனால் மாணவர்களின் பெற்றோரை சமாளிக்கவும் தங்கள் மீதான குறையை திசை திருப்ப கோவில் நிர்வாகம் 'சம்திங்' கேட்பதாக புகார் தெரிவிக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இது போன்று புகார்கள் கூறப்படுவது வழக்கமாகி விட்டது.
இவ்வாறு கூறினர்.