ADDED : பிப் 29, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : துாத்துக்குடியில் தென்மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் கட்டா, குமித்தே பிரிவுகளில் மதுரை மாணவர்கள் பல்வேறு பரிசுகள் பெற்றனர்.
வேலம்மாள் போதி கேம்பஸ், மனோகரா பள்ளி, சிவகங்கை எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி, விருதுநகர் கே.வி.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர். சோப்புக்காய் கோஜுரியோ கராத்தே டு இந்தியா ரென்சி சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். பள்ளி நிர்வாகிகள் அங்குவேல், தணிகைவேல் முருகன், பாலா காமராஜன், பயிற்சியாளர்கள் அவினாஷ், அஸ்வின், சத்தீஸ்வரன், மணிகண்டன், கபிலராம், மாதவன் கபிலேஷ் கண்ணன், கவின்ராம் கலந்து கொண்டனர்.

