UPDATED : நவ 04, 2026 11:00 AM
ADDED : நவ 04, 2026 10:57 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, காய்ச்சல் தடுப்பு பணிகள் நடக்கின்றன.
இதையொட்டி நேற்று 33 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனைக்கு ஒன்று வீதம் ஆனையூர், புதுார், கொடிக்குளம், மஸ்தான்பட்டி உள்ளிட்ட 33 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஐந்து வயதிற்குட்பட்ட 74 குழந்தைகள் உட்பட 1,654 பேர் பங்கேற்றனர்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு பகுதியில் நடமாடும் மருத்துவ சிறப்பு முகாம் நடக்கிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகவும், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுமாறும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
