UPDATED : நவ 04, 2026 11:00 AM
ADDED : நவ 04, 2026 10:57 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாரவிடுப்பு, தீபாவளி முன்பணம் கேட்டு போராட்டம் நடத்திய நிலையில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் வழிகாட்டிய தினக்கூலி தர ஒப்புதல் அளிக்கப்பட்டது. வார விடுப்பு, தீபாவளி முன்பணம் போன்றவை தனியார் நிறுவனங்கள், தமிழ்நாடு மருந்து சேவை கழகம் மூலம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனையில் 750 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன சுகாதார, துாய்மைப் பணியாளர்கள் வேலை செய்யும் நிலையில், 63 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட போது, மருத்துவமனை பாதிக்கப்படாமல் மாற்றுப் பணியாளர்கள் மூலம் சுகாதாரம் பராமரிக்கப்பட்டது. சமாதானப் பேச்சுக்கு பின் பணியாளர்கள் வேலைக்குத் திரும்பினர்.
