UPDATED : அக் 20, 2026 06:47 PM
ADDED : அக் 20, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: தனிச்சியம் ஊராட்சி அய்யணகவுண்டன்பட்டியில் காட்சிப்பொருளான மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. தற்போது 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். அவர்கள் நாய்கள், போதை ஆசாமிகளால் மிகுந்த சிரமமடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
