/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பேச்சு போட்டி
/
மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பேச்சு போட்டி
ADDED : செப் 24, 2025 05:47 AM
மதுரை,: மதுரை தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அறக்கட்டளை பேச்சுப் போட்டி நடந்தது.
முதல்வர் பாண்டியராஜா, போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். துறைத் தலைவர் காந்திதுரை வரவேற்றார். பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் கற்பகம், போட்டி விதிமுறைகளை மாணவர்களுக்கு விளக்கினார்.
'சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல்', 'திருக்குறள் காட்டும் மேலாண்மை', 'வில்லி பாரதத்தில் சகோதரத்துவம்' என்பது உட்பட பல்வேறு இலக்கிய தலைப்புகளில் 40க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பேசினர்.
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர் சாம்சன் ஜோசப், காரைக்குடி அழகப்பா பல்கலை மாணவர் நவீன், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மாணவி ஷோபனா முறையே முதல் 3 பரிசுகளை வென்றனர். புலவர் வேலாயுதன், பேராசிரியர்கள் முத்துவேல், விசாலாட்சி, செந்தில்குமார், செந்துாரன், ரத்னம் ஆகியோர் நடுவர்களாக வழிநடத்தினர்.