மதுரை: மதுரை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி விளையாட்டு விழா நடந்தது. சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., அருணாச்சலம் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று விழாவை துவங்கி வைத்தார். சென்னை கல்விக் குழுமச் செயலாளர் செந்தில் ரமேஷ் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, பேசினார்.
மாணவர்கள் பாரம்பரிய யோகாக்கலை, நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எஸ்.பி.ஓ.ஏ., கல்வி குழுமத் தலைவர் நித்திஷ் ஆண்ட்ரெயா ராஜாசிங், இணைச் செயலாளர் லேசர் ஜெய பிரகாஷ், முன்னாள் தாளாளர் முனியசாமி, முதல்வர் லதா திரவியம், துணை முதல்வர் அனிதா கரோலின், தலைமை ஆசிரியர் பொற்கொடி கலந்துகொண்டனர்.
* மதுரை தனக்கன்குளம் மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் 4ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
போட்டிகளை துணை கமிஷனர் (தெற்கு) இனியோ திவ்யன் துவக்கி வைத்தார். திருப்பரங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் சசிப்ரியா மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றனர்.
பள்ளித் தலைவர் வடிவேலு, நிர்வாகச் செயலாளர் பாலசுப்ரமணியன், முதல்வர்கள் ராமலட்சுமி, ஹேமா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.