ADDED : ஏப் 26, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு கோடைகால உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
திருமங்கலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் வரவேற்றார். ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் தெய்வம், ஆசிரியர் கார்த்திக், மாணவர் அஸ்வின் கவுதம் வழிநடத்தினர். முகாமை உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேக்கப் தேவானந்த், சுபாஷ் அரவிந்த், என்.எஸ்.எஸ்., ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வம், ஜெயசீலன், ஜெயபிரபு ஒருங்கிணைத்தனர்.