UPDATED : ஜூலை 18, 2026 11:14 PM
ADDED : ஜூலை 18, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்:கள்ளிக்குடி தாலுகா குராயூர் கமண்டல நதி அருகே உள்ள காட்டுப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
அப்பகுதி கண்மாய்களில் தற்போது தண்ணீர் இன்றி வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் ஊருக்குள் அவ்வப்போது வருகின்றன. நேற்று மூன்று வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் தண்ணீர் தேடி குராயூருக்குள் வந்தது. மானை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் சம்பவ இடத்திலேயே அது இறந்தது. மானின் உடலை மீட்டு ஏழுமலை வனச்சரக அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
