/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீன அதிபருடன் இலங்கை அதிபர் சந்திப்பு
/
சீன அதிபருடன் இலங்கை அதிபர் சந்திப்பு
ADDED : ஜன 16, 2025 05:26 AM

பீஜிங்: அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள இலங்கை அதிபர் அனுரா குமாரதிசநாயகே, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார்.
நம் அண்டை நாடான இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயகே, நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் சீனா சென்றார்.
அதிபராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நம் நாட்டுக்கு வந்த அனுரா குமார திசநாயகே, இரண்டாவது பயணமாக, தற்போது சீனா சென்றுள்ளார்.
பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே சந்தித்து பேசினார்.
அப்போது, சீனா - இலங்கை இடையே பொருளாதாரம், சமூக மேம்பாடு, தொழில், பாதுகாப்பு போன்ற துறைகளில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பில், சீனா - இலங்கை இடையேயான நீண்ட கால நட்பை,சீன அதிபர் ஷீ ஜின்பிங் நினைவுகூர்ந்தார்.
மேலும், புதிய வளர்ச்சி சகாப்தத்தை ஏற்படுத்துவதில் இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்ற தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்நாடு உடனான ஒத்துழைப்பை எதிர் காலத்தில் தொடர்வதற்கானஉறுதிப்பாட்டையும்வலியுறுத்தினார்.
பொருளாதாரம், தொழில் துறை, தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் முன்னேற்றத்தில் இலங்கை மகிழ்ச்சி அடைவதாக அதிபர் அனுரா குமாரதிசநாயகே குறிப்பிட்டார்.