/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நடமாடும் கழிப்பறை: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நடமாடும் கழிப்பறை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நடமாடும் கழிப்பறை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நடமாடும் கழிப்பறை: உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : டிச 21, 2024 08:04 AM
ADDED : டிச 21, 2024 05:47 AM
மதுரை, : திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பக்தர்களுக்காக நடமாடும் கழிப்பறை வசதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு: ஸ்ரீரங்கம் உத்திர வீதிகளில் கிழக்கு, தெற்கு, வட பகுதியில் 3 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. கீழ உத்திரவீதி, வேதாந்த தேசிகன் சன்னதி, ஆஞ்சநேய சுவாமி சன்னதி அருகில், வடக்கு உத்திர வீதியில் ராமானுஜ ஜீயர் மடத்திற்கு எதிரில் புதிதாக பொதுக் கழிப்பறைகள் அமைக்க திருச்சி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
உத்திர வீதிகளில் தை, மாசி மாதங்களில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா, தையில் தேரோட்டம் நடைபெறும். அப்பகுதியில் கழிவுநீர் வெளியேற பாதாளச் சாக்கடை இல்லை. புது கழிப்பறைகள் அமைத்தால் சுகாதாரக்கேடு ஏற்படும். சாலையின் அகலம் குறுகிவிடும். போக்குவரத்து, திருவிழா, தேரோட்டத்திற்கு இடையூறு ஏற்படும். கோயிலுக்கு சொந்தமான மாற்று இடத்தில் கழிப்பறை அமைக்கலாம். உத்திர வீதிகளில் புதிதாக கழிப்பறைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
செப்.,19ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு: ஸ்ரீரங்கத்தில் ரோடு, நடைபாதைகளில் கழிப்பறை உள்ளிட்ட எவ்வித கட்டுமானமும் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டது.
திருச்சி மாநகராட்சி கமிஷனர், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் இணை கமிஷனர்,'திருவிழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கம் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் தற்காலிக கழிப்பறை அமைக்க அனுமதிக்க வேண்டும். செப்.,19ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்,' என மனு செய்தனர்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி எல்.விக்டோரியா கவுரி அமர்வு: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிச.,30 முதல் ஜன.,18 வரை நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். அவற்றை தினமும் 2 முறை சுத்தம் செய்ய வேண்டும். ஜன.,19 ல் அக்கழிப்பறைகளை அகற்ற வேண்டும். இந்நடைமுறையை சித்திரை திருவிழாவின்போது பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.