/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியாத ஸ்டாலின்
/
குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியாத ஸ்டாலின்
குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியாத ஸ்டாலின்
குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியாத ஸ்டாலின்
ADDED : மார் 02, 2026 07:27 AM
மேலூர்: ''குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியாமல் முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்,'' என, தமிழக வெற்றிக்கழக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலுாரில் த.வெ.க., சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் கருணாநிதி 2006ல் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றினார்.
வாக்களித்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., வினர் மரியாதை கொடுக்க மறுக் கின்றனர்.
காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் அடிப்படை உரிமையான மரியாதையை தான் கேட்கிறார். இதில் தவறு கிடையாது.
குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியாமல் முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்.
அ.தி.மு.க.,வோ கூட்டணியை முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
மக்களுக்காக உள்ளவர் த.வெ.க., தலைவர் விஜய் மட்டும் தான். விஜய்க்கு உள்ள மக்களின் ஆதரவால் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு அ.தி.மு.க., -தி.மு.க., பெரும் குழப்பத்தில் உள்ளது என்றார்.

