ADDED : ஜூன் 02, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் சார்பில், 'மாநில சுயாட்சியும் கல்வி வளர்ச்சியும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்வியாளர் அரங்கில் உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள், இடஓதுக்கீடு, பொருளாதார வளர்ச்சியில் திராவிட பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பேசினர். அடுத்து நடந்த அரசியல் அரங்கில் அமைச்சர் கோவி.செழியன், எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., பெற்றோர் ஆசிரியர் கழக மாநில உறுப்பினர் ராஜிவ்காந்தி, திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெ.மாரப்பன், மு.தேன்மொழி உட்பட பலர் பேசினர்.