திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தென் பழஞ்சியில் நடந்த மாநில கபடி போட்டியில் காரைக்குடி கல்லுாரி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாக் அவுட் முறையில் நடந்த கபடி போட்டியில் 85 அணியினர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் மணிமாறன் துவக்கி வைத்தார். துணைச் செயலாளர் பாலாஜி, இளைஞரணி அமைப்பாளர் விமல், ஒன்றிய செயலாளர்கள் தனபாலன், வேட்டையன், நிர்வாகிகள் செல்வேந்திரன், சக்திவைரன், சின்னச்சாமி, மணிகண்டன், போதுமணி, ராஜா ரவி பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் காரைக்குடி கல்லுாரி அணியினர் மதுரை பெருங்குடி அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு கோப்பையுடன் ரூ. 30 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 25 ஆயிரம், 3ம் இடம் வென்ற மதுரை நகர் போலீஸ் அணிக்கு ரூ.20 ஆயிரம், 4ம் பரிசு ரூ. 15 ஆயிரம், 5 முதல் 8 இடம் பிடித்த அணியினருக்கு தலா ரு.5,000, வழங்கப்பட்டது. இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் போட்டி ஏற்பாடுகள் செய்தார்.