ADDED : நவ 27, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மியாகி வேர்ல்டு கோஜூரியு கராத்தே பள்ளி சார்பில் நடந்த மாநில கராத்தே பிரிமியர் லீக் போட்டியில் அச்சம்பத்து கேரன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
ஓமேஸ் கிஷோர், பா. கிருத்திகா ஸ்ரீ, தருண், ஜஸ்மிதா, ரா. கிருத்திகா ஸ்ரீ, ரிஷிகா, தாரிகா, கபிலன், ஜித்தேஷ் முதல் பரிசு பெற்றனர். காசிவின், நிகிதா, முகிலன், திலக்தரன், மகாசக்தீஸ்வரி, ரிஸ்வந்த் சாய் 2ம் பரிசும், துகிலன், அட்சதியா, முனேஷ், ஹர்ஷித், சரவணபாண்டி, யாஷிகா, நித்திஷ் பாலன், மஹிரா, சுஜித், சந்தியா ஸ்ரீ, ஷாபிகா 3 ம் பரிசும் பெற்றனர்.
கேரன் கல்வி குழுமச் செயல் தலைவர் பிரபாகரன், முதன்மை முதல்வர் ஜாய்ராஜன், துணைத் தாளாளர் டிம் ஹக்டன், முதல்வர் மோசஸ், தலைமை பயிற்சியாளர் ராஜா வாழ்த்தினர்.

