/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசுப் போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பணியாளர்கள்... தனியாருக்கு தாரைவார்ப்பு :பஸ்களை சீரமைக்கும் தனியார் ஒப்பந்ததாரருக்கு பணியாற்ற

ADDED : டிச 03, 2025 06:23 AM

மதுரை:மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ்களை சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்ததாரர்கள், அரசு பணிமனை ஊழியர்களையே பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் உள்ளன. திண்டுக்கல் மண்டலத்தின் கீழ் தேனி போக்குவரத்துக் கழகமும் உள்ளது. இந்த மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட டெப்போக்கள் உள்ளன. இவற்றின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ்கள் சீரமைப்பு பல ஆண்டுகளாக ஓடும் பஸ்கள் பல, சில ஆண்டுகளிலேயே பழமையான பஸ்களாக மாறி விடுகின்றன. அவற்றை முறையாக பராமரிக்காத நிலையில் 'லொட லொட' சத்தத்துடன் பல்வேறு விபத்துக்களையும் சந்திக்கின்றன. எனவே இவற்றை மீண்டும் மாற்றி அமைக்கும் வகையில் ( ரீ பில்ட்) நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரையில் பசுமலை, பைபாஸ் ரோடு தலைமை பணிமனை, திண்டுக்கல், தேனி பகுதிகளில் வசதிகள் உள்ளன. இங்கு நீண்ட காலமாக இயங்கும், பழைய பஸ்களை சீரமைத்து மீண்டும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இப்பணியை டெண்டர் மூலம் தனியார் நிறுவனங்களை தேர்வு செய்து பஸ்களை சீரமைக்கின்றனர். அந்நிறுவனங்கள் அரசு டெப்போக்களில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களையே பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''ஒப்பந்தம் பெற்ற தனியார் அமைப்புதான் தனது ஊழியர்களை கொண்டு பணிசெய்ய வேண்டும். மாறாக அரசு டெப்போக்களில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளரையே பயன் படுத்துகின்றனர். இவ்வகையில் 40 டெப்போக்களிலும் உள்ளவர்களில் பெரும்பாலோர் பணியாற்றுகின்றனர். இதனால் அரசு பணம்தான் விரயமாகிறது'' என குற்றம்சாட்டுகின்றனர்.
நிர்வாகம் கூறுவதென்ன மேலாண் இயக்குனர் சரவணன் கூறியதாவது: பஸ்கள் சீரமைப்புக்கென அரசு தேவையான நிதிஒதுக்கி தந்துள்ளது. இப்பணி செய்ய தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஆட்களே வராத நிலையில், மதுரை கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பஸ்களை சீரமைக்க வேண்டியுள்ளது. அதுவும் நிதியாண்டுக்குள் (2026 மார்ச் 31) முடித்தாக வேண்டும். இப்பணி செய்வது தொடர்பாக வேறெந்த நிபந்தனைகளும் கிடையாது. இதனால் விதிமீறல் நிலையும் இல்லை'' என்றார்.