ADDED : ஆக 09, 2025 04:14 AM

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் முத்தையா அம்பலம் நினைவு கோப்பை, மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி நடந்தது.
இதில் 15 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் வென்ற நான்கு அணிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை 3 - 1 புள்ளிகளில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து ஆடிய சென்னை ஜேப்பியார் பல்கலை 2ம் இடம் வென்றது. அமெரிக்கன் கல்லுாரி மூன்றாம் இடமும், சென்னை லயோலா கல்லுாரி நான்காம் இடமும் பெற்றன.
பரிசளிப்பில் உடற்கல்வி துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வர் பால்ஜெயகர் தலைமை வகித்தார். அமலாக்கத்துறை எஸ்.பி. சந்திரசேகர் பரிசு வழங்கினார்.
மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் உடற்கல்வி இயக்குநர் தனராஜ், உடற்கல்வி இயக்குநர் நிர்மல்சிங் பங்கேற்றனர்.