ADDED : அக் 20, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : கோட்டநத்தாம்பட்டியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத்து நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் கோட்டநத்தாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 11 ஊருணிகளில் 34 ஆயிரம் ரோகு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் காசிநாதபாண்டியன், உதவி இயக்குநர் சிவராமசந்திரன், ஆய்வாளர்கள் முருகேசன், சோபியா, மேலுார் பி.டி. ஒ,, க்கள் சுந்தரசாமி, ரத்தினகலாவதி, ஊராட்சி தலைவி உஷா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.