ADDED : பிப் 07, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலு வலகம் முன்பு, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடந்தது.
மத்திய அரசின் தொழிலாளர் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.12ல் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடக்கி றது. தொழிலாளர் சம் மேளன மாநில துணை தலைவர் பிச்சை, சி.ஐ. டி.யூ., பொருளாளர் சிவக்குமார், ஐ.என்.டி.யூ.சி., மாநில நிர்வாகி ஜீவன்மூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி., அகில இந்திய நிர்வாகி நந்தா சிங், டி.டி.எஸ்.எப்., மாநில நிர்வாகி சம்பத் பேசினர்.
போராட்டத்தில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதி யில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை ஊர்வல மாக சென்று சாலை மறியலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தனர்.

