/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பலத்த காற்றுடன் மழை புளியமரம் சாய்ந்தது
/
பலத்த காற்றுடன் மழை புளியமரம் சாய்ந்தது
ADDED : மார் 18, 2026 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நேற்று மாலை ஆறு மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அரை மணி நேரம் மழைபெய்து நின்ற நிலையில் உசிலம்பட்டி-- மதுரை ரோட்டில் கொங்கபட்டி அருகே ரோட்டோரத்தில் இருந்த புளிய மரம் அருகில் இருந்த மின்இணைப்பு கம்பிகள் மீது சாய்ந்தது. அதனால் மின்தடையும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
அதிர்ஷ்ட வசமாக வேறு பாதிப்புகள் ஏற்படவில்லை. போலீசார் தீயணைப்பு வீரர்கள், மின்துறையினர் ரோட்டில் சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். தொடர்ந்து மின்கம்பிகளையும் மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

