நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி, மூட்டா முன்னாள் நிர்வாகி பார்த்தசாரதி தலைமையில்மறியல் போராட்டம் நடந்தது.
வி.ஏ.ஓ., மணிகண்டன், ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதரன், சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் சோலையன், வருவாய்த்துறை சங்க மாவட்ட நிர்வாகி மாரியப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவி சின்னப் பொண்ணு உட்பட பலர் பங்கேற்றனர். அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்த போலீசார்,மாலையில் விடுவித்தனர்.