/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டூவீலருடன் கிணற்றில் விழுந்த மாணவி பலி
/
டூவீலருடன் கிணற்றில் விழுந்த மாணவி பலி
ADDED : ஜன 22, 2026 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: உசிலம்பட்டி தாலுகா வகுரணி அருகே சந்தைப்பட்டி விவசாயி பாண்டி- ரம்யா தம்பதிக்கு கபிலன், கவி முகிலன் என்ற மகன்கள், ஹாசினி 14, என்ற மகள் இருந்தனர்.
மகள் ஹாசினி வகுரணி அரசு கள்ளர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஹாசினி, தனது அண்ணன் கபிலனுடன் சேர்ந்து சித்தப்பா பிரபுவின் டூவீலரை எடுத்து ஓட்டினர். நிலை தடுமாறி அருகில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்துள்ளனர். இதில் தலையில் காயம் ஏற்பட்டு ஹாசினி பலியானார். காயங்களுடன் கபிலன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

