ADDED : ஜன 22, 2026 05:33 AM
கோயில் தெப்ப உற்ஸவம் 2ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் கீழச்சித்திரை வீதி, தெற்காவணி மூல வீதி வழியாக குஞ்சான் செட்டியார் மண்டபம் சேருதல், காலை 9:00 மணி, மண்டபத்தில் இருந்து அன்னவாகனத்தில் அம்மனும், பூத வாகனத்தில் சுவாமியும் சின்னக்கடைத் தெரு, வடக்குச்சித்திரை வீதி வழியாக கோயில் வந்தடைதல், இரவு 7:00 மணி.
தைப்பூசத் திருவிழா: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை 4:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
குரு வார சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மகா பெரியவர் விக்ரகம் சிறப்பு பூஜை, புதிய ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு சுவாமி திருகுணாதீதானந்தர் ஜெயந்தி: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:35 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
பொது லயன்ஸ் கிளப் ஆப் மதுரை அளவை சார்பில் பட்டய நாள் விழா கொண்டாட்டம்: ஜே.சி., ரெசிடென்ஸி, லேடிடோக் கல்லுாரி ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்: மாவட்ட ஆளுனர் செல்வம், மாலை 6:30 மணி.
'தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்' பன்னாட்டு கருத்தரங்கம்: கோர்ட்யார்ட் மேரியட் ஓட்டல், மதுரை, துவங்கி வைப்பவர்: அமைச்சர் தங்கம் தென்னரசு, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், கலெக்டர் பிரவீன்குமார், ஏற்பாடு: தொல்லியல் துறை,
பள்ளி, கல்லுாரி மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு சட்டம் 2019 விழிப்புணர்வு கருத்தரங்கம்: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்: மாவட்ட சமூகநல அலுவலர் காந்திமதி, தலைமை: செயலாளர் தர்மசிங், முன்னிலை: முதல்வர் ஜெயக்குமார், காலை 10:30 மணி.
தமிழ்க்கூடல்: என்ன அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, நாச்சிக்குளம், தலைமை: தலைமை ஆசிரியர் ஷீலா செண்பகவல்லி, சிறப்புரை: நல்லாசிரியர் விருது பெற்ற மகேந்திரபாபு, மதியம் 2:00 மணி
மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

