ADDED : டிச 06, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: தும்பைபட்டியைச் சேர்ந்தவர் சீமான் 23. சிங்கப்பூரில் 2024 ஜனவரி முதல் பட்டயபடிப்பு (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்துள்ளார். புகையிலையும் விற்று வந்துள்ளார். இந்நிலையில் 2024 அக்.19 படிப்பை பாதியில் நிறுத்தியவர் இந்தியா திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டி விலக்கில் நண்பர்களுடன் மது அருந்திய போது காரில் வந்த 7 பேர் வாளால் சீமானின் தலையில் வெட்டி விட்டு தப்பினர். மேலுார் அரசு மருத்துவமனையில் சீமான் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் விசாரணையில், 'இந்தியா திரும்பிய சீமானிடம் அதே ஊரை சேர்ந்தவர்கள் கொடுத்தனுப்பிய பொருட்களை, உரியவர்களிடம் கொடுக்காத ஆத்திரத்தில் வெட்டியது தெரிய வந்துள்ளது. கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.