UPDATED : ஆக 09, 2026 07:30 PM
ADDED : ஆக 09, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை:தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மதுரை மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவன் அபிமன்யு ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் பெற்றார். மாணவிகள் லட்சுமிராய் 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள், மாணவி அனுவர்ஷினி 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இவர்களை மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் கருணாகரன் பாராட்டினார்.
