/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜன்னல் கண்ணாடி உடைப்பு 'ஜாலி' மாணவர்கள் கைது
/
ஜன்னல் கண்ணாடி உடைப்பு 'ஜாலி' மாணவர்கள் கைது
ADDED : ஜூலை 24, 2025 12:11 AM

தல்லாகுளம், :ஜாலிக்காக வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்த பள்ளி மாணவர்கள், 5 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
மதுரை கூடல்புதுார், திருப்பாலை, அண்ணாநகர், அய்யர்பங்களா, தல்லாகுளம் பகுதியில், கடந்த மூன்று நாட்களாக வீடுகளின் மீது சிலர் கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வருவதாக, போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
போலீசார் விசாரித்து, இது தொடர்பாக அண்ணாநகர், புதுார் பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுள்ள, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஐந்து பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
மாணவர்கள் ஐந்து பேரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். தினமும் ஐந்து மாணவர்களும் சேர்ந்து, வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி உடைத்து வந்தனர். விளையாட்டாகவும், ஜாலிக்காகவும் செய்ததாக ஒப்புக்கொண்டனர். கைதான மாணவர்கள், இளைஞர் நல குழுமத்திடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.