ADDED : நவ 14, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் ஒழுக்கம், ஒற்றுமை, தலைமைப்பண்பு, மனவலிமையை வளர்க்கும் நோக்கத்தில், மதுரையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாணவர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
நவ.,7 ல் துவங்கிய பயணத்தை பள்ளி முதல்வர் நவநீதகிருஷ்ணன் துவக்கினார். பிளஸ் 1ன் 73 மாணவர்கள் பங்கேற்று இரண்டு நாட்களில் 241 கி.மீ., தொலைவை கடந்தனர். பயணத்தின்போது மாணவருக்கு தேவையான குடிநீர், உணவு, ஓய்வு எடுக்கும் வசதிகள் செய்யப்பட்டது. பாதுகாப்பிற்காக போலீஸ் ரோந்து வாகனம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது. ஏற்கனவே மதுரையிலிருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடி, தனுஷ்கோடி என மூன்று ஆண்டுகளாக இதுபோன்ற பயணத்தை இப்பள்ளி மாணவர்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

