/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டம்
/
கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டம்
ADDED : பிப் 09, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பரவை பேரூராட்சி வங்கி ஊழியர் சங்கம் நகர் பி காலனி 4வது தெருவில் குடியிருப்போர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து குடும்பத்துடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'பேரூராட்சி, உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி பெற்று ரோடு தானம் செய்து, முறையாக வீடு கட்டி வசிக்கிறோம். ஆனால் எங்களுக்கு குடிநீர், கழிவுநீர் கால்வாய், தார்சாலை உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க தயாராக உள்ளோம்' என்றனர். அவர்களுடன் பள்ளி மாணவர்கள் சிலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

