நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அருகே எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலைப் பிரிவு மாணவர்கள் தலைமையாசிரியர் ஜெயபிரகாஷ் தலைமையில் பொருளியல் கல்விச் சுற்றுலாவாக மதுரை அமெரிக்கன் கல்லுாரியை சுற்றிப்பார்த்தனர்.
முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பொருளியல் துறை பேராசிரியர் முத்துராஜா மாணவர்களுடன் உரையாடினர். மாணவர்களுக்கு பொருளியல் பாடத்தின் முக்கியத்துவம், அதற்கான உயர்கல்வி, ஆராய்ச்சி, வேலை வாய்ப்புகள் குறித்து முத்துராஜா தலைமையில் பேராசிரியர்கள் விளக்கினர். கல்லுாரியின் பல்வேறு துறைகள், நுாலகம் உள்ளிட்ட பகுதிகளை மாணவர்கள் பார்வையிட்டனர். ஆசிரியர்கள் முருகேசன், செந்தில்குமார், வீரவேல், பாக்யராஜ், அன்பு இல்லம் நிறுவனர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.