/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாமதமாக புறப்படும் பஸ் அவதியில் மாணவர்கள்
/
தாமதமாக புறப்படும் பஸ் அவதியில் மாணவர்கள்
ADDED : மார் 05, 2024 06:15 AM
திருமங்கலம், : திருமங்கலத்தில் இருந்து அண்ணா பல்கலை கல்லூரிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் தாமதமாக புறப்படுவதால் உரிய நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டைக்கு அருகே கீழக்குயில்குடியில் இக்கல்லூரி சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. திருநகர் பகுதியில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கல்லுாரிக்கு செல்லலாம். திருமங்கலம் - மதுரை நான்கு வழிச்சாலையில் சென்றால் இடதுபுறம் கல்லூரிக்கு செல்லும் ரோடு உள்ளது.
கடந்தாண்டு திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு 48 யு.டி., எண் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இது கீழக்குயில்குடி அண்ணா பல்கலை கல்லுாரி வழியாக ஆரப்பாளையம் செல்லும்.
கல்லூரி மாணவர்களுக்காகவே இந்த பஸ் விடப்பட்டது. தற்போது திருமங்கலத்தில் இருந்து இந்த பஸ் காலை 9.15 மணிக்கு பதில் காலை 9.50 மணிக்கு புறப்படுகிறது.
கல்லூரியில் வகுப்புகள் காலை 9:00 மணிக்கு துவங்கி விடுகிறது. இந்த பஸ்ஸை நம்பி செல்லும் கல்லுாரி மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மாலையிலும் போதிய பஸ் வசதி இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கல்லூரிக்கு உரிய நேரத்தில் மாணவர்கள் செல்ல ஏதுவாக அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.

