ADDED : அக் 25, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் அச்சம்பத்து பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல், வாழை வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோகிலா சக்தி, வி.ஏ.ஓ., லோகம்பாள் வயல்களில் ஆய்வு செய்தனர்.
சேதங்கள் குறித்தும், தண்ணீர் வெளியேற வாய்க்கால்களை சீரமைப்பது குறித்தும் உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக விவசாயி சரவணனிடம் தெரிவித்துள்ளனர்.