/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் திடீர் மின்தடையால் தவிப்பு
/
மதுரையில் திடீர் மின்தடையால் தவிப்பு
ADDED : டிச 10, 2024 05:34 AM
மதுரை: மதுரை நகரில் நேற்று காலை திடீர் மின்தடை ஏற்பட்டது. காலை 6:24 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். பள்ளி, அலுவலகம் உட்பட வேலைகளுக்கு செல்வோர் வீடுகளில் மின்சாதனங்களை இயக்க வழியின்றி திணறினர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரையின் மொத்த கன்ட்ரோலும் பசுமலை மின்வாரியத்தில் உள்ளது. இதில் செம்பட்டிக்கு செல்லும் பீடர் லைனில் கோளாறு ஏற்பட்டு 'டிரிப்' ஆனது. இதை சரிசெய்யும் போது மெயின் லைனிலும் 'டிரிப்' ஆனதால் மதுரை நகரின் தென்பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது.
இதனால் பசுமலை, சுப்ரமணியபுரம், அவனியாபுரம், வில்லாபுரம், அனுப்பானடி, வண்டியூர் பகுதிகளில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால் 6:57 மணிக்கு மின்வினியோகம் சீரானது. சில இடங்களில் பராமரிப்பு பணிக்காக மதியம்மின்தடை ஏற்பட்டது என்றனர்.

