
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் எஸ். கிருஷ்ணாபுரம் தெருக்களில் ரோடு, மின் விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
முத்து முனியாண்டி: எங்கள் பகுதி மண் ரோடாக உள்ளது. ஆங்காங்கே மேடு பள்ளத்துடன் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விழும் பாயம் உள்ளது. மழைக்காலங்களில் சேறாக மாறுவதால் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. போதுமான மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இரவில் நடந்து செல்ல பயமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.