ADDED : ஜன 02, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்; டி.கல்லுப்பட்டியில் தெருக்களில் ஆங்காங்கே குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
குவிந்து கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அதிலிருந்து வெளிவரும் கரும்புகை காற்றில் பரவி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வீடு வீடாக வாங்கி அதை மண்புழு உரம் தயாரிக்கின்றனர். ஆனால் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் இதை சரியாக செய்வதில்லை. மற்ற பேரூராட்சிகளைப் போல் இந்த பேரூராட்சியும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

