மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான 21 நாள் கோடை இலவச விளையாட்டு பயிற்சி நிறைவு விழா நடந்தது.
பள்ளிகளில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, ஹேண்ட்பால் விளையாட்டுகளில் 21 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், ''பங்கேற்றவர்களுக்கு முட்டை, பிஸ்கெட், சுண்டல் தினமும் வழங்கப்பட்டது. முகாமில் 319 மாணவர்கள் பயன்பெற்றனர் ''என்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத்குமார், ரோட்டரி சங்க உறுப்பினர் சிவா, மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், கூடைப்பந்து கழகச் செயலாளர் வசந்தவேல், நாட்ச் இந்தியா திட்டத்தலைவர் மீனாட்சிசுந்தரம், பொறியாளர் ராஜேஷ் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை, பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. விடுதி மேலாளர் முருகன் நன்றி கூறினார்.