UPDATED : நவ 10, 2026 10:06 AM
ADDED : நவ 10, 2026 10:02 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோமதி புரம் சென்ஸ் சுற்றுச் சூழல் தொண்டு மையம், ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம் சார்பில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ‘சுந்தர’ தீபாவளி கொண்டாடப்பட்டது.
மையத் தலைவர் பதி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் வரவேற்றார். ஸ்ரீநாக்ஸ் நிறுவன இணை இயக்குநர் இந்திராபதி முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கார்த்திகேயன், கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் ராகவன் உள்ளிட்டோர் பேசினர்.
சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 75க்கும் மேற்பட்டோர் சமூக நல்லிணக்கத்துடன் பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறினர்.
