நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : கிரெடிட் ஆக்சஸ் கிராமின் லிட்., நிதி நிறுவனம் சார்பில் சமூக வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செல்லம்பட்டி, விக்கிரமங்கலம், தும்மக்குண்டு, கே.நாட்டாபட்டி ஆரம்ப சுகாதார மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ரத்தினசுந்தரம், டாக்டர் ஆசாத் அலி, நிதிநிறுவன மண்டல மேலாளர் ஜான்பீட்டர் மற்றும் பொன்ராஜ், மனோரஞ்சிதம், ராம்குமார், அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரகனுாரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர்.
தலைமை ஆசிரியர் கண்மணி, ஆசிரியர்கள் பூரணவள்ளி, பிரமிளா, தேன்மொழி, அழகுமீனாள், விஜயலட்சுமி, வள்ளிநாயகி, சேகர், பிரின்ஸ், டெர்ஷியா கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

