ADDED : நவ 29, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பணியிடங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் 3வது நாளாக நேற்று தொடர்ந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'அரசின் நலத்திட்டங்களை இரவு பகல் பாராது மக்களிடையே கொண்டு செல்வோர் தங்கள் கோரிக்கைக்காக பல போராட்டங்களை நடத்தினர். அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் பலமுறை பேசியுள்ளனர். அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்த அரசு, அதை நிறைவேற்றவில்லை. அவர்களை உதாசீனப்படுத்துவது தொடர்கிறது. இதனை கண்டிப்பதோடு, வருவாய் அலுவலர்களை அழைத்து பேசி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.

